நான்
இப்போதெல்லாம்
நிஜத்தில் சிரிப்பதைவிட
உன் கனாக்களில் சிரிப்பதுதான் அதிகம்
உன்னை
மறக்க நினைக்கும் நிமிடங்களில்
எதோ ஒன்று
எனக்கு புதிதாய் உன்னை அறிமுகபடுத்திவைக்கிறது
நான்
அனாவசியமாய் குழம்பித்தவிக்கும்
உன் அருகாமை என்னமோ
எனக்கு அவசியமாகப்படுகிறது
யாரிடமும் அடிபணியாத மனசு
உன் இழுப்புக்கெல்லாம் இஸ்டம் போல
செல்லக்குழந்தையாய்
அடங்குகிறது
எதிலும்
சுயம் தொலையாத நான்
உன்னிடம் மட்டும் தொலைக்கிறேன்
என்னை ............
No comments:
Post a Comment
THANK YOU FOR YOUR COMMENT