1. யோசித்த கணம்
யோசித்த கணத்திலே
வாசித்துவிட்டேன்
எழுதாத என் கவியை
பிரம்மன் படைப்பில்
அழகிய கவிதையாய் நீ
எதிரில் நின்ற பொழுது!
2. அலைக்கற்றை காதல்
அலைபேசி அழைப்பை
அலறவிடாமல்
அலைக்கற்றையும்
புன்முறுவலுடன்
பின்வாங்கியது
காதல் நெருக்கத்தில்
களிப்படையும்a
காதலர்களைக் கண்டு..!
3. காதலே துணை
இடை நெருங்கும்
இளங்காற்றை
“Take diversion”
பதாகையை பற்றியபடி...
பற்றுக்கொடியாய் பிணைந்த
முற்றும் மறந்த காதலர்களுக்கு
பாதுகாவலனாய் துணையிருந்தது
காதல்!
This comment has been removed by the author.
ReplyDelete