Wednesday, April 13, 2016

கூகுள் வழங்கும் 3G இணைய சேவை.

ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன் (உப்பல்) களை வானில் சுமார் 30 இடங்களில் பறக்க விட்டு சோதனை செய்துள்ளது கூகுள் நிறுவனம்.
இதன் மூலம் இயற்கைச் சீற்றங்களின் போதும் இணையத்தைத் தடையின்றி பயன்படுத்த இயலுமாம். கூகுள் நிறுவனத்தின் பிரத்தியேகக் குழு ஒன்று  இந்த பலூனை தயாரித்துள்ளது. இப்புதிய முயற்சிக்கு பிராஜெக்ட் பலூன் (உப்பல் திட்டம்) என்று  பெயரிட்டுள்ளது . தானியங்கி கார், கூகுள் கண்ணாடி போன்றவற்றை தயாரித்தளித்த கூகுள்  குழுவே இத்திட்டத்தையும் தயாரித்துள்ளது என்பதும் கூறத்தக்கது.
இத்திட்டத்தின் நோக்கம் எதிர்காலத்தில் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களின் போதும் மக்கள் இடையூறின்றி இணையத்தை பயன் படுத்த உதவுவது தான் என்று கூகுள் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கூகுள் வழங்கும்  3G  இணைய சேவை!


No comments:

Post a Comment

THANK YOU FOR YOUR COMMENT