Saturday, March 24, 2012


  

ஒட்டாவோ நகரில் துப்பாக்கி சூடு நடத்திய 19 வயது 

Man charged with murder in Ottawa shooting

ஒட்டாவோ நகரில் வெள்ளிக்கிழமை மாலையில் ஒரு 19 வயது இளைஞன் ஒருவன் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் மரணமடைந்தார். மற்றும் இருவர் படுகாயம் அடைந்தனர்.

அந்த இளைஞனின் பெயர்   ஜாக்காரி டெளரவ் ( Zakaria Dourhnou). அவனது வெறித்தனத்தால் 20 வயது காலிட் டோராஹ் (Khalid Doreh) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். படுகாயம் அடைந்த இருவர் ஒட்டாவோ அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்காக போராடி வருகின்றனர். அவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
காலிட் டோராஹ் தனது வீட்டிற்கு அருகிலேயே  வெள்ளிக்கிழமை பிற்பகலில் போர்த்விக் அவென்யூ ( Borthwick Avenue) என்ற இடத்தில் சுடப்பட்டு இறந்தார் என காவல்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
குற்றவாளியான டெளரவ் காவல்துறை அதிகாரிகளால் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டான். கொலை செய்தவுடன் அவன் தப்புவதற்கு எவ்வித முயற்சியையும் செய்யவில்லை. அவன் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவான் என தெரிகிறது.

No comments:

Post a Comment

THANK YOU FOR YOUR COMMENT