Sunday, May 6, 2012

சில பெண்கள் உறவில் வெறுப்பு காட்டுவது ஏன்?




சிறு வயதிலிருந்தே செக்ஸ் என்றால் கெட்ட வார்த்தை என்று சொல்லி வளர்க்கப்படும் பெண்களுக்கும், அதைப்பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பே இன்றி வளர்க்கப்படும் பெண் களுக்கும் பெரியவர்களானதும் அந்த விஷ யத்தில் வெறுப்பு அதிகம் ஏற்படுகிறது. காதல் கைகூடாமல் வேறு மண மகனை மணக்க நேரிடும் பல பெண்களுக்கு செக்ஸ் என்பது வெறுப்பிற்குரிய விஷய மாக மாறி விடுகிறது. காதலனுடன் உடலளவிலும் நெருக்கமாக இருந்திருந்தால் அந்தப் பெண்களால், கணவனுடன் அந்தரங்கமான உறவில் ஈடுபட முடிவதில்லை.
* செக்ஸைப் பற்றிப் பேசவும், அதில் தனது தேவைகளை வெளிப்படுத்தவும் ஆண்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றொரு அபிப்ராயம் உண்டு. எங்கே தனது தேவை களைப் பற்றிப் பேசினால் தன்னைத் தன் கணவன் மட்டமாக நினைத்து விடுவானோ என்ற பயமே பல பெண்களுக்கு வெறுப்பாக மாறி விடுகிறது.
* சிறு வயதில் செக்ஸ் கொடுமைகளுக்கும், துஷபிரயோகங் களுக்கும் உட்படுத்தப்படும் பெண்களுக்கு பெரியவர்களானதும், அதைப்பற்றி முழுமையாகத் தெரிய வரும்போது அந்த விஷயமே வெறுக்கத் தக்கதாக மாறி விடுகிறது.
உடல்நலக் கோளாறுகளும் பெண்களின் வெறுப்பிற்கு முக்கிய காரணம். அளவுக்கதிக உதிரப்போக்கு, வெள்ளைப் போக்கு, பிறப்புறுப்பு துர்நாற்றம், அரிப்பு போன்ற பல பிரச்சினைகளால் இன்பமாக இருக்க வேண்டிய தாம்பத்திய உறவு பல பெண்களுக்குத் துன்பமாக மாறி விடுகிறது.
* கணவனின் முரட்டுத்தனச் செயல்களுக்கு இணங்கக் கட்டாயப்படுத்தப்படும் பெண்களுக்கும் செக்ஸில் வெறுப்பே மிஞ்சுகிறது.
* பெண்களுக்கு செக்ஸில் விருப்பம் குறைய கணவரது உடல்நலக் கோளாறுகளும் முக் கிய காரணம்.
* குழந்தை பெற்றதுமோ, குறிப்பிட்ட வயதை அடைந்ததுமோ அல்லது மெனோபாஸ் காலக்கட்டத்திற்கு வந்ததுமோ பல பெண்கள் தமக்கு வயதாகி விட்டதாக நினைத்துக் கொள் கிறார்கள். அதன்பிறகு தனக்கு செக்ஸெல்லாம் அனாவசிய விஷயம் என்று அதை வெறுத்து ஒதுக்க ஆரம்பிக்கிறார்கள்.
* செக்ஸ் என்கிற விஷயம் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொருவித அனுபவத்தைத் தரும். அப்படியிருக்கையில் மற்ற பெண்களது செக்ஸ் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, அவர்கள் சொல்கிற விஷயங்கள் சில பயங்கரமானதாக இருக்கக் கூடும். அதைக்கேட்டு விட்டு, செக்ஸில் அனுபவமே இல்லாத பெண்களுக்கு தனக் கும் அப்படித்தான் நேரப் போகிறது என்ற திகிலுணர்வு மனத்திற்குள் பதிந்து விடும். அதனால் செக்ஸ் என்றாலே பயத்திற்கும், வெறுப்பிற்குமுரிய விஷயம் என்று அவர்கள் நினைக்க ஆரம்பித்து விடுவார்கள்.
* மனம் அமைதியாக இல்லாதபோது உடலும் ஒத்துழைக் காது. பெண்களுக்கு வீட்டில், வெளியிடங்களில் எனப் பல இடங்களில், பல சூழ்நிலைகளில் சந்திக்கும் பிரச்சினைகளும் செக்ஸில் விருப்பத்தைப் படிப்படி யாகக் குறைத்துவிட வாய்ப்புகள் உண்டு.
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

தோலை மினுமினுப்பு ஆக்கும் ஆரஞ்சுபழத் தோல் பொடி




உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி தரும் ஆரஞ்சு பழச் சுளைகளை தின்றுவிட்டு அதன் தோலை நாம் குப்பையில் எறிந்து விடுவோம். இனிமேல் ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் அதன் தோலை உடனே எறியாமல் வெயிலில் உலர வைக்கவும்.
நன்றாக காய்ந்த தோலை அரைத்து பொடியாக்கி, அதனுடன் பசும்பாலை கலந்து பேஸ்ட் போல செய்யவும். அதனை முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளுக்கு அப்ளை செய்ய வேண்டும்.
சிறிது நேரம் கழித்து வெது வெதுப்பான முகம் கழுவ தோல் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஒரு மாதத்திற்கு காலை நேரத்தில் இதனை தொடர்ந்து பூசி வரவேண்டும்.
அப்புறம் பாருங்கள் உங்களின் முகத்தை கண்ணாடியில் பார்த்து நீங்களே வியக்கும் அளவுக்கு முகம் பளிச்சென்று ஆகும்.
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

அழகை அதிகரிக்கவும், குறைகளை மறைக்கவுமே மேக்கப்: உருமாற்ற அல்ல…!




மேக்கப் என்றாலே ஏதோ நம்மை அப்படியே உருமாற்றி விடக் கூடிய நமக்கு சிறிதும் தொடர்பும் இல்லாத விஷயம் என்று தான் நம்மில் பலரும் நினைக்கிறோம். உண்மையில் சொல்ல போனால் நம் அழகை அதிகரித்துக் காட்டவும், குறைகளை சிறிதளவு மறைத்துக் காட்டவும் மேக்கப் போட்டுக் கொள்கிறோம்.
நாம் எந்த இடத்திற்கு கிளம்புகிறோம் என்பதை மேக்கப் போடும்போது கவனிக்க வேண்டும். நாம் சாதாரணமாக வெளியே ஷாப்பிங்கோ அல்லது நண்பர்கள் வீட்டுக்கோ கிளம்பும்போது திருமண வீட்டுக்கு போவது போல் மேக்கப் போட்டுக் கொள்ளக் கூடாது.
சிறந்த மேக்கப் என்பது நாம் போட்டிருக்கும் மேக்கப் வெளியே தெரியாதவாறு போடுவதுதான். அப்போது தான் இயற்கை அழகோடு நாம் தோன்ற முடியும்.
முதலில் நாம் கவனிக்க வேண்டியது, நம் சருமத்திற்கு பொருத்தமான மேக்கப் பொருட்களைத் தேர்வு செய்து வாங்கியோ அல்லது தயாரித்தோ உபயோகிப்பதுதான்.
பொதுவாக, கறுப்பு நிறம் உடையவர்கள் கோதுமை கலரில் உள்ள கிரீம் அல்லது பவுடரை பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் நாடகத்திற்கு மேக்கப் போட்டது போல் இருக்கும். எனவே அவரவர் சருமத்திற்கு ஏற்ற கிரீமை உபயோகிப்பது நல்லது.
மேக்கப் செய்து கொள்ள ஆரம்பிக்கும் முன் முகத்தை நன்றாக வெநநீரால் சோப்பு போட்டுச் சுத்தமாகக் கழுவி ஈரமில்லாமல் துடைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், புரோடக் புல் கிரீமை முதலில் தடவ வேண்டும். இது சருமத்திற்கு ஏற்ற வகையில் மாறிவிடும். பிறகு நம்முடைய சருமத்திற்கு தகுந்த கிரீமை தடவ வேண்டும்.
பவுண்டேஷன் என்பது தான் மேக்கப் செய்து கொள்ள அடிபடை முயற்சி. பவுண்டேஷன் கிரீமை சிறிதளவு எடுத்து முகம் முழுவதும் விரல் நுனியில் எல்லா இடத்திலும் வைத்துக் கொள்ளவும். பின்னர் முகம் முழுவதும் பரவலாகத் தடவிக் கொள்ளவும். முக்கை ஒட்டிம், கைகளுக்கு கீழேயும் கிரீமை மிக லேசாகத் தடவவும். பவுண்டேஷன் கிரீம் தடவிய பிறகு ஸ்பாஞ்சை தண்ணீரில் வைத்து நனைத்து பிழிந்து விட்டு பின்னர் முகம் முழுவதும் தடவ வேண்டும். பின் ஈரமான ஸ்பாஞ்சை வெதுவெதுபான தண்ணீரில் சுத்தமாகக் கழுவி உலர வைக்கவும்.பவுடேஷன் கிரீம்கள் பல நிறங்களில் கிடைக்கும். அதனால் நம் சருமத்திற்கு ஏற்ற நிறத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பொதுவாகவே, பகல் நேரங்களில் உள்ள மேக்கப், இரவு நேரங்களில் வேறுவிதமாக மாறி முகத்தை அசிங்கபடுத்தி விடும். எனவே, மாலை நேரத்தில் மெல்லிய மேக்கப் சிறந்தது. வெயில் காலங்களில் வாட்டர் புருப் மேக்கப்பும், திருமணம் போன்ற விசேஷங்களுக்கு செல்லும்போது கொஞ்சம் அடர்த்தியான மேக்கப்பும் செய்து கொள்வது நல்லது.
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

புகைக்கும் பெண்களே, எச்சரிக்கை!




புகைப் பிடிக்கும் பழக்கமுள்ள பெண்களுக்கு இருதய நோய் வரக்கூடிய ஆபத்தானது அப்பழக்கமுள்ள ஆண்களை விட அதிகமாக இருக்கிறது என முப்பது வருட ஆராய்ச்சிகளில் மீளாய்வு கூறுகிறது.
இருபத்து நான்கு லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளை வைத்துப் பார்க்கையில் புகைக்கும் ஆண்களை விட புகைக்கும் பெண்களுக்கு இருதய நோய் ஆபத்து 25 சதவீதம் கூடுதலாக இருப்பதாக லான்செட் என்ற மருத்துவ சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு அதிக ஆபத்து வருவது ஏன் என்பதற்கான காரணங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
சாதாரணமாக ஆண்களை விட பெண்கள் குறைந்த எண்ணிக்கையிலான சிகரெட்டுகளைத்தான் பிடிக்கிறார்கள் என்றாலும், அவர்களுக்கு இருதய நோய் ஆபத்து அதிகம் என்ற கண்டுபிடிப்பு ஒரு எச்சரிக்கையாக வந்துள்ளது என பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் என்ற இருதய நோய் ஆராய்ச்சி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
உலகில் அதிகம் பேரைக் கொல்லும் நோய் இருதய நோய்தான் என்றும் ஒவ்வொரு ஆண்டும் இந்நோயின் காரணமாக ஏழுபது லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
ஆண் பெண் என இருபாலாரிலுமே புகைப்பழக்கம் இல்லாதவர்களோடு ஒப்பிடுகையில் புகைப்பவர்களுக்கு இருதய நோய் வருவதற்கான ஆபத்து இரண்டு மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Source: BBC Science
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

அனுஷ்கா போன்ற பின்னழகு வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க!




முகமும் முன்னழகும் மட்டுமே பெர்சனாலிட்டிக்கு ப்ளஸ் அல்ல. முதுகும் பின்னழகும் ஃபெர் பெக்டா இருந்தாதான் பெர்சனாலிட்டி மட்டுமல்ல டிரெஸ் ஃபிட்டிங்கும் பெர் ஃபெக்டா இருக்கும்.
அதற்காக நான்கு எளிய உடற்பயிற்சிகள் உங்களுக்காக தரப்படுகிறது.
ஒரு விரிப்பை தரையில் விரித்துக் கொள்ளவும். அதில் அப்படியே நிமிர்ந்து முட்டிக் கால் போட்டுக் கொண்டு அமரவும். பின் முட்டிக் காலை அசைக்காமல் இடுப்புக்கு மேலே வில்லாக வளைந்து கொள்ளவும். அப்படி, நன்றாக வளைந்து கொண்டே உங்களின் பின்னங் கால்களைத் தொடுவதற்கு முயற்சி செய் யுங்கள். முடிந்த அளவுக்கு நன்றாக வளைந்து உங்களின் பாதங்களைத் தொடவும். இப்படியே சுமார் 30 விநாடிகளுக்கு காலில் இருந்து கையை எடுக்காமல் வளைந்த படியே பாதங்களைத் தொட்டுக் கொண்டு இருங்கள்…

மேட்டில் வசதியாக வயிறு அழுந்தி யிருக்கும்படி படுத்துக்கொள் ளுங்கள். வயிற்றுப் பகுதி தரையில் நன்றாக பதிந்திருக்க வேண்டும். பிறகு இரண்டு கைகளையும் நேராக நீட்டிக் கொள்ளவும். இதைச் செய்யும்போதே உங்களின் தலை மேல் நோக்கித் தூக்கியவாறு இருக்க வேண்டும். இப்போது இடது கையைத் தூக்கியவாறு வலது காலையும் தூக்கியபடி கொஞ்சம் நேரம் அதே பொஸிஷனில் வைத்திருங்கள். உங்களின் உடம்பு நேராக இருக்கட்டும். இப்போது சாதாரண நிலைக்கு வந்து வலது கையைத் தூக்கியபடி இடது காலை தூக்குங்கள். இப்படியே பத்து தடவை செய்யவும்.
மேட்டில் படுத்துக் கொள்ளுங்கள். தலை மட்டும் அப்படியே அசையாமல் இருக்கட்டும். தோள்பட்டை, வயிற்றுப்பகுதி, கால்கள் போன்றவற்றை அப்படியே தூக்கியவாறு வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக முழங்கால் பகுதி மடங்கியவாறு கால்கள் கீழே பதியும்படி இருக்கட்டும். கைகள் இரண்டும் சமமாக மேட்டில் அழுந்தும்படி அப்படியே நீட்டி வைத்துக் கொள்ளுங்கள். இப்படி தினமும் பத்து தடவை செய்ய வேண்டும்.
நாற்காலியின் முனையில் உட்காரவும். மெதுவாக இப்போது உங்களின் இடுப்பை மட்டும் முன்னுக்குத் தள்ளுங்கள்.இடுப்பை அப்படியே வைத்துக் கொண்டு உங்களின் முதுகு, கழுத்துப் பகுதி, தலைப்பகுதியை முன்னே நோக்கித் தள்ளுங்கள். இப்போது உங்களின் இரண்டு கைகளில் வாட்டர் பாட்டில்களை எடுத்துக் கொண்டு மெதுவாக அதை மேலே தூக்கவும். அப்படியே கீழே இறக்கவும். இதையும் பத்து தடவை செய்யவும். இந்த நான்கு பயிற்சிகளையும் தினசரி செய்து வந்தால் போதும், அனுஷ்கா போல் பின்னழகில் ஜொலிப்பீர்கள்
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

பேஸ்புக் கணக்கு HACK செய்யப்படுவதிலிருந்து எவ்வாறு தப்பிப்பது?




உங்கள் பேஸ்புக் கணக்கு வேறொருவரால் ஹேக் செய்யப்பட்டிருக்கும் அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். அல்லது அவ்வாறு செய்யப்படுவதிலிருந்து வருமுன் காப்பதற்கு சில நடைமுறைகளை இங்கே பார்க்கலாம். இவை எப்போதும் பேஸ்புக் நிறுவனத்தாலேயே அறிவுறுத்தப்படும் விஷயங்கள் ஆகும்.
1. பாஸ்வேர்ட் பாதுகாப்பு
பேஸ்புக்கில் பயன்படுத்தும் பாஸ்வேர்ட் கடினமானதாகவும் வேறு தளங்களில் பாவிக்காத பாஸ்வேர்ட்களாகவும் இருக்க வேண்டும். நம்பர் மற்றும் ஸ்டிரிங்க் ஆகிவற்றையும் பயன்படுத்தி உருவாக்குவதே சிறந்தது. குறைந்தது 6 எழுத்துக்கள் வருமாறு பாருங்கள்.(example,X471mi)
2. பிரைவட் பிரவுஸிங்க்
பேஸ்புக் பாவித்தபின்னர் லாக் அவுட் செய்து எப்போதும் உலாவியை பூட்டி விடுங்கள் (முடிந்தால் கணிணியை அணைத்து விடுங்கள்) . இன்ரநெட் சென்டர்களாயின் இது மிக முக்கியம். Remember Me ஐ எப்போதும் செக் செய்யவே கூடாது.
3.மின்னஞ்சல் பாதுகாப்பு
பேஸ்புக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் கணக்கையும் எப்போதும் பாதுகாப்பாக வைத்திருங்கள் ஏனெனில் தொடர்புடைய மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்த முடிந்தால் பேஸ்புக்கிலும் இலகுவாக நுழைந்துவிடலாம். இரண்டிற்கும் வேறு வேறு பாஸ்வேர்ட்டை எப்போதும் தருவதே நல்லது.
4.பாதுகாப்பு கேள்விகள்
பேஸ்புக் கணக்கை தொடங்கும் போது சில பாதுகாப்பு கேள்விகள் கேட்பார்கள். இவை பாஸ்வேர்ட்டை மறந்து விட்டால் கணக்கை மீண்டும் பயன்படுத்த உதவும். எனினும் இவற்றில் எப்போதும் கடினமான கேள்வி பதில்களை தேர்வு செய்யுங்கள். அவ்வாறு செய்யும் போது மற்றவர்கள் அவற்றை ஊகிக்க முடியாது. இதுவரை கேள்வி பதில்களை செட் செய்ய வில்லையாயின் Account Settings page சென்று அவற்றை உருவாக்கி கொள்வதே நல்லது.
5. எப்போதும் facebook.com சென்ற பின்னரே லாகின் செய்யுங்கள்.
மின்னஞ்சலில் வரும் தெரியாத இணைப்புக்களில் லாகின் செய்ய வேண்டாம்.
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

குத்துப்பாட்டுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட வருகிறார் நடிகை சதா!




சுந்தர் C இயக்கத்தில், விஷால் நடிக்கவிருக்கும் திரைப்படமான “எம்.ஜி.ஆர்” திரைப்பட சூட்டிங் விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.
இத் திரைப்படத்தில் உள்ள ஓர் குத்துப்பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட அன்னியன் புகழ் சதா ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ”புலிவேஷம்” திரைப்படத்துக்கு பின்னர், நடிகை சதாவுக்கு வாய்ப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந் நிலையிலேயே குட்துப்பாடலுக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
“எம்.ஜி.ஆர்” திரைப்படத்தில் விஷாலுடன், முன்னாள் நடிகை ராதாவின் மகள் கார்த்திகா கதநாயகியாக நடிக்கவுள்ளார்
இத் திரைப்பட பாடல்கள் விஜய் ஆன்டனி இசையில் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்